போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் அனந்தப்பன் மகன் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளியான இவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடையம் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.