போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Update: 2022-11-07 18:45 GMT

விழுப்புரம்

கண்டாச்சிபுரம் தாலுகா இருளர்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 42). தொழிலாளியான இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீ்ட்டுக்குள் புகுந்து அங்கு தனியாக இருந்த 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் நாகராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்