துப்பாக்கியுடன் காரில் சுற்றிய அரசியல் பிரமுகர் கைது
நெல்லையில் துப்பாக்கியுடன் காரில் சுற்றிய அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூரை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் பாளையங்கோட்டையில் துப்பாக்கியுடன் காரில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மேலப்பாளையம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார், ஒரு ஓட்டல் வாசலில் வைத்து அந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் ஏர் பிஸ்டல் ரக துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், திருச்செந்தூரை சேர்ந்த செந்தூர் மகாராஜன் என்பதும், புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி நிறுவனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.