ஆ.ராசாவை கைது செய்யக்கோரி போலீசில் பா.ஜ.க. புகார்

ஆ.ராசாவை கைது செய்யக்கோரி போலீசில் பா.ஜ.க.வினா் புகார் அளித்தனா்.

Update: 2022-09-16 21:14 GMT

மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில், வடக்கு மண்டல தலைவர் ரெயின்போ கணபதி தலைமையில் பா.ஜ.க.வினர் ஒரு புகார் மனு அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க.வைச்சேர்ந்த ஆ.ராசா எம்.பி. மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தார்கள். இதில் பொதுச்செயலாளர் சரவணன், மூத்த நிர்வாகி காந்தி, ஆன்மிக பிரிவு சிவமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

இதேபோல் ஆ.ராசா எம்.பி. மற்றும் தி.மு.க. தலைவர்களை பா.ஜ.க. இளைஞர் அணி செயலாளர் ஹரிகரன் அவதூறாக பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரியப்பம்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில்நாதன் நேற்று மாலை சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்போது அவருடன் அரியப்பம்பாளையம் பேரூர் கழக பொருளாளர் ரமேஷ், துணை செயலாளர் மாதேஸ்வரன், வார்டு செயலாளர்கள் தங்கவேலு, வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் மற்றும் துரைசாமி ஆகியோர் இருந்தார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்