பாப்பாரப்பட்டி:
இண்டூர் போலீசார் நேருநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து வந்த பயணிகள் ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 70 மதுபாட்டில்களை கடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் பி.எஸ்.அக்ரஹாரத்தை சேர்ந்த ஜெயவேல் (வயது 37), ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் (41) மற்றும் இண்டூரைச் சேர்ந்த செந்தில்குமார் (42) என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.