கடம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது
கடம்பூர் அருகே வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே அத்தியூர் புதூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த வீடு அருகே உள்ள குளியலறையில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் பெரியசாமி (வயது 69) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.