பெண்களை செல்போனில் படம் பிடித்தவர் கைது

பெண்களை செல்போனில் படம் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-07 19:33 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் புதுப்பேட்டை வ.உ.சி. நகர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவருடைய மகன் பவுல்ராஜ் (வயது 27). இவர், புதுப்பேட்டை பகுதியில் நின்று அந்த வழியாக சாலையில் நின்றவர்களை செல்போன் மூலம் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி பவுல்ராஜை கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்