பணம் கேட்டு வாலிபர்களை மிரட்டிய 2 பேர் கைது
பணம் கேட்டு வாலிபர்களை மிரட்டிய 2 பேர் கைது
ஈரோடு வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 22). இவருடைய நண்பர் ஜாவிக் (20). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் 2 பேரிடமும் மது அருந்த பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஈரோடு வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (25) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை மதுகுடிக்க பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து தெருவை சேர்ந்த பாபுராஜ் என்பவரை ஈரோடு டவுன் போலீசார் கைது செய்தனர். இதில் திருநாவுக்கரசு மீது ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகளும், பாபுராஜ் மீது 3 வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.