ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் தெற்கு தரவை, மேற்கு பகுதி தரவை காட்டுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் அரசு அனுமதி இன்றி மினி சரக்கு வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் மினி சரக்கு வாகனத்தினை அரை யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தெற்கு தரவை காலனி பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 33), சூரிய பிரகாஷ் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய பழனிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.