சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைது
சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த நெல்முடி கரையை சேர்ந்தவர் பூமயில்(வயது 48). இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் பூமயிலுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சிவகங்கை எண் 2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
அப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் பூமயில் அப்பில் எதுவும் செய்யவில்லையாம். இதனால் அவரை கைது செய்ய கோர்ட்டில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் பூமயிலை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.