வாளுடன் சென்ற வாலிபர் கைது

வாளுடன் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-03 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி டவுன் போலீசார் சிறுகுளம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 25) என்பவர் கையில் பெரிய வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்த போது திருத்தங்கலை சேர்ந்த பொன் இருளப்பன் என்பவரை பழிவாங்க செல்வதாக கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்