100 லிட்டர் சாராய ஊறல் அழிப்புதொழிலாளி கைது

Update: 2023-05-24 19:00 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள பேரரிப்புதூர் கிராமத்தில் அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 70) என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக 100 லிட்டர் ஊறலை தயார் செய்து வைத்திருப்பது தெரியவந்தது. சாராயம் தயாரிக்கும் போது அதில் போதையை அதிகப்படுத்துவதற்காக ஊமத்தங்காய் சாற்றையும் பாத்திரத்தில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊறலையும், ஊமத்தங்காய் சாற்றையும் போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்