லாரியில் பேட்டரி திருடியவர் கைது

லாரியில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-14 18:45 GMT

மேலூர், 

மேலூரில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் விவேக் (வயது 39). இவருக்கு சொந்தமான லாரியை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். அந்த லாரியில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்த ராஜா (30), திருடப்பட்ட பேட்டரியை வாங்கிய அன்புராஜன் (47) ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்