விவசாயியை தாக்கிய பெயிண்டர் கைது

குருபரப்பள்ளி அருகே விவசாயியை தாக்கிய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-10 18:45 GMT

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அருகே உள்ள எட்ரப்பள்ளியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 40). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (28). பெயிண்டர். உறவினர்களான இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு ஏற்பட்ட பிரச்சினையில் முனிராஜ் இரும்பு கம்பியால் வேடியப்பனை தாக்கினார். இதில் காயம் அடைந்த வேடியப்பன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி முனிராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்