பா.ஜ.க. தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது

பா.ஜ.க. தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி முருகேசனை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு புகுந்து மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கூலிப்படையை சேர்ந்த 2 வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சூரங்கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் மற்றும் பா.ஜ.க. முன்னாள் மாவட்ட நிர்வாகி கதிரவனை போலீசார் தேடி வந்தனர். நேற்று கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் சண்முகநாதனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்