வெப்படையில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் சிக்கினர்

Update: 2023-05-08 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படையில் குமாரபாளையம் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டீக்கரை ஓரமாக நின்ற 3 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பீல்போய் (வயது 20)ம், ரோகித் (24), மனோஜா (26) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்