பக்தர்களை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது
பக்தர்களை கத்தியால் குத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் ஒரு வேனில் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். ராமேசுவரம் பழைய போலீஸ் லைன் சாலையோரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ராமேசுவரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இருளேஸ்வரன் (வயது 21) அவர்கள் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகின்றது. இதை பார்த்த வேனில் இருந்தவர்கள் இதுகுறித்து கேட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த இருளேஸ்வரன் அவர்களை கத்தியால் குத்த முயன்றதாககூறப்படுகிறது. இதுகுறித்து ராமேசுவரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருளேஸ்வரனை கைது செய்தனர்.