ஆயுதத்துடன் பதுங்கியிருந்தவர் கைது

ஆயுதத்துடன் பதுங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-28 19:44 GMT

மதுரை செல்லூர் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வைகை வடகரை பகுதியில் வாலிபர் ஒருவர் பதுங்கியிருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரை பிடித்து விசாரித்த போது செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பதும், அவர் கத்தி, மிளகாய்பொடி ஆகியவற்றுடன் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்