ஆடு திருடிய வாலிபர் கைது

Update: 2023-04-27 19:00 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி பில்பருத்தி காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பாலமுருகன் (வயது 30) என்பவர் தனது வீட்டின் முன் 10 ஆடுகளை கட்டி வைத்திருந்தார். இதில் ஒரு ஆடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆட்டை வடசந்தையூர் சந்தையில் விற்பனைக்கு இருப்பதை கண்டார். இந்த ஆட்டை யார் கொண்டு வந்தது என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். அதில் பில்பருத்தி புத்தர் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ்ராஜ் (21) என்பவர் ஆட்டை திருடி விற்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் பொம்மிடி போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்மாரியப்பன் ஆடு திருடிய பிரகாஷ்ராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்