பேரிகை பகுதியில்வீடுகளில் கொள்ளையடித்த 3 பேர் கைது30 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல்

Update: 2023-04-09 19:00 GMT

ஓசூர்:

பேரிகை பகுதியில் உள்ள வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நகைகள், பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே முதுகுறுக்கியில் கடந்த மாதம் 2-ந் தேதி எருதுவிடும் விழா நடைபெற்றது. கிராம மக்கள் அங்கு சென்ற நேரத்தில் அந்த பகுதியில் உள்ள வீடுகளை கொள்ளையர்கள் குறிவைத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தலைமறைவாகி விட்டனர்.

இதுதொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கைது

இந்த நிலையில் போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் வீட்டு பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதில் பிரபலமான திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் கிராமத்தை சேர்ந்த காதிஷ் என்ற காட்வின் மோசஸ் (வயது 33), அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (25), மடவாளம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த்பாபு (34) ஆகிய 3 பேரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஓசூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கைதானவர்களில் காதிஷ், திருப்பத்தூர், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் மற்றும் 4 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்