மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் கள் விற்பனை செய்வதாக பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சிந்துவிற்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் பச்சையப்பன் ராஜேந்திரன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி ஈ.பி.காலனி பின்புறம் குமரவேல் (வயது40) என்பவரும், ஜீவா நகர் பகுதியில் நாகராஜ் (55) என்பவரும் கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் அத்திமுட்லு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பியோடிய சுந்தரம் என்பவரை தேடி வருகின்றனர்.