3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய 2 பேர் கைது

தாராபுரத்தில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2023-04-08 18:03 GMT

தாராபுரத்தில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

திருட்டு

தாராபுரத்தில் கடந்த 25-ந் தேதி அரசு பஸ் கண்டக்டர் தங்கவேல் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுன் தங்க நகை திருட்டு ேபானது. 31-ந் தேதி அசோக்நகர் பகுதியில் கூட்டுறவு வங்கி அதிகாரி செல்லமுத்து வீட்டில் 5பவுன் நகை, ரூ. 3லட்சம், அரை கிலோ வெள்ளி திருட்டுப்போனது. கடந்த 5-ந் தேதி கணபதி நகரில் முன்னாள் அரசு ஊழியர் ஜீவானந்தம் வீட்டில் 8பவுன் நகை திருட்டுப்போனது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தாராபுரம்-திருப்பூர் சாலையில் ஐ.ஐ.டி. கார்னர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்களில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது 35) மற்றொருவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (25) என தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தாராபுரத்தில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து நகையை திருடியதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10பவுன் நகை மற்றும் ரூ.90ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

் கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்