இரும்பு குழாய் திருடிய 2 பேர் கைது

இரும்பு குழாய் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-05 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது மீரான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன் (வயது 46), சஞ்சய் (35). இவர்கள் இருவரும், முகமது மீரானுக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள இரும்பு குழாய் மற்றும் வெண்கல கேட் வாழ்வுகளை உடைத்து திருடி சென்றனர். இதுகுறித்து முகமது மீரான் சாயல்குடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதன், சஞ்சய் ஆகியோரை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்