வெள்ளி குத்துவிளக்கு திருடியவர் கைது
வெள்ளி குத்துவிளக்கு திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி,
பரமக்குடி பாரதி நகரை சேர்ந்த அரவிந்தகுமார் மனைவி தாயம்மாள் (வயது 30). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மன்சூர் அலி (32). சம்பவத்தன்று இவர் தாயம்மாள் வீட்டில் புகுந்து 41 கிராம் எடையுள்ள 2 வெள்ளி குத்து விளக்குகளை திருடி சென்றார். இதுகுறித்து தாயம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலியை கைது செய்தனர்.