வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது
வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பாரதிநகரை சேர்ந்த பாண்டியன் மகன் காளீஸ்வரன் (வயது 24) என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூல்குமார்(30) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் ராமநாதபுரம் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் அங்கு சென்று கூல் குமாரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கூல் குமார் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது. இதுதவிர, அவர் மீது குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்தார்.