காரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது
காரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தோமையார்புரம் பாம்பாற்று படுகை பகுதியில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் சென்ற 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 2 துப்பாக்கி, 3 தோட்டாக்கள், ஒரு கத்தி ஆகியவை இருப்பது தெரிந்தது. போலீசார் அவர்கள் சென்ற காரையும், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் காரில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஆய்க்குடியை சேர்ந்த சற்குணம் (வயது 47), எஸ்.பி.பட்டினம் காளீஸ்வரன் (32), புதுக்கோட்டை மாவட்டம் தென்னமாரி கிராமத்தைச் சேர்ந்த அரசப்பன் என்ற கார்த்திக்(31). சிவனேஸ்வரன் (31) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கிக்கான உரிமம் காலாவதியாகி உள்ளது. ஒரு துப்பாக்கிக்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.