பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் பாபு (வயது 51). இவர் அரசு கலைக் கல்லூரி அருகில் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இரவு பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை பட்டறைக்கு வந்து பார்த்தபோது வெளியே வைத்திருந்த 9 இரும்பு ஜன்னல்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து இரும்பு ஜன்னல்கள் திருடிய அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
==========