கடத்தூர் அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியவர் கைது

Update: 2023-03-14 18:45 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள பழைய புதுரெட்டியூரை சேர்ந்தவர் பழனி (வயது 58). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (33) என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் பழனி வீட்டின் அருகே சுதாகர் கழிவறை கட்ட குழி தோண்டியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுதாகர், பழனி, இவருடைய மனைவி, மகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசர் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்