பாப்பாரப்பட்டி அருகே மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Update: 2023-03-11 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி போலீசார் சோமனஅள்ளி மெயின் ரோட்டில் எட்டியாம்பட்டி மயானம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மொபட்டில் மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பிளப்பநாயக்கனஅள்ளியை சேர்ந்த சேட்டு என்கிற பெருமாள் (வயது 34), வினோத் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மொபட் மற்றும் 62 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்