லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது

லாட்டரி சீட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-26 18:45 GMT

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் பாப்பாகுடி சாலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து சோதனையிட்டபோது அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி எண்கள் கொண்ட சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனை செய்த பணம் ரூ.1,500 இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்