தர்மபுரியில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது

Update: 2023-02-25 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அக்ரி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து தர்மபுரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மேட்டூரை சேர்ந்த பாக்கியம் (வயது 48), தர்மபுரியை சேர்ந்த பிரபு (31) ஆகியோர் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு, பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர்களான பாக்கியம், பிரபுவை கைது செய்த போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டனர். 

மேலும் செய்திகள்