மதுக்கடை ஊழியரை வாளால் மிரட்டியவர் கைது
மதுக்கடை ஊழியரை வாளால் மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை ரெயில் நிலையம் அருகில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் சம்பவத்தன்று இரவு சிவகங்கை டி.புதூர் பகுதியைச் சேர்ந்த நிதீஷ்குமார் (வயது20) என்பவர் மது வாங்க வந்தார். அவர் ரூ.850 மதிப்புள்ள மதுபானத்தை வாங்கிக்கொண்டு அதற்கு விலையாக ரூ.100 மட்டும் கொடுத்தாராம். இதைத் தொடர்ந்து கடையின் சூப்பர்வைசர் கண்ணன் (43) என்பவர் உரிய பணத்தை தரும்படி நிதீஷ் குமாரை கேட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த நிதீஷ் குமார் கையில் வைத்திருந்த வாளால் அங்கிருந்த மதுபான பாட்டிலை உடைத்து கடை சூப்பர்வைசரை மிரட்டினாராம். இதைத் தொடர்ந்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து நிதிஷ்குமாரை கைது செய்தார்.