தர்மபுரியில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் சிக்கினார்

Update: 2023-02-24 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன. இதுகுறித்த புகார்களின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களை திருடியது காரிமங்கலத்தை சேர்ந்த வேலுமணி என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்