பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது

பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-16 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி வடக்கு சேணியர் தெருவை சேர்ந்தவர் பழனியாயி (வயது 67). இவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் சங்கிலியை பறித்துசென்றுவிட்டனர். இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பல்கலைக்கழக சாலையில் நடைப்பயிற்சி சென்ற சுப்பிரமணியபுரம் 10-வது வீதியை சேர்ந்த சிக்ரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஷீலா (63) அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியையும் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது திருட்டில் ஈடுபட்டது மதுரை பைக்காராவை சேர்ந்த பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட கவாஸ்கர் (36) என தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் திருட்டில் ஈடுபட்டது மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் மதுரை சைபால் நியூ காலனியை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஜான்சன் (52) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்