தர்மபுரி:
தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பாலக்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாஸ்திரமுட்லு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த மாதேவ் (வயது 30) என்பதும், கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாதேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.