மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே திருமல்வாடி திம்லா மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திருமல்வாடி அருகே திம்லாமேடு பகுதியில் வாலிபர் ஒருவர் பிளாஸ்டிக் பையுடன் நின்றார். போலீசாரை கண்டவுடன் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் சுதாரித்து வாலிபரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து விசாரித்ததில் அவர் திம்லாமேடு பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 32) என்பதும், அவர் கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. செந்திலை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.