மாரண்டஅள்ளியில் கஞ்சா விற்ற வாலிபர் சிக்கினார்

Update: 2023-02-10 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி கணபதிநகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் 500 கிராம் கஞ்சா சிறு, சிறு பொட்டலங்களாக இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர், பெட்டமுகிலாளம் பகுதியை சேர்ந்த ருத்ரப்பன் (வயது 29) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்