பரமத்திவேலூர்:
கபிலர்மலையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் ைகது செய்யப்பட்டனர்.
லாரி டிரைவர் கொலை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஓவியம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் (வயது 50). லாரி டிரைவர். இவருடைய நண்பர் சேகர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிச்சந்திரன் தனது நண்பர் சேகரை பார்க்க கபிலர்மலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த 2 பேர் ஹரிச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிச்சந்திரனை அடித்து, உதைத்ததுடன் அங்கு கிடந்த கல்லால் தாக்கி ஹரிசந்திரனை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த பயங்கர கொைல சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம், வெங்கரையை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் கொலையாளிகள் கபிலர்மலை அருகே உள்ள சின்னசோளிபாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மோகனசுந்தரம் (37), கார்த்திக் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.