பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கருப்புராஜா (வயது 21) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்ணின் தாயார் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்புராஜா தனது நண்பர்கள் அஜித்குமார் (22 மற்றும் 2 பேருடன் ஆட்டோவில் சென்று இளம்பெண்ணின் தாயாரை ஆபாசமாக பேசி வாள் போன்ற ஆயுதத்தை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து கருப்புராஜா, அஜித்குமாரை கைது செய்தார்.