அரூர் அருகே கள் விற்றவர் கைது

Update: 2023-02-04 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே ஈட்டியம்பட்டி பகுதியில் கல் விற்பனை நடப்பதாக அரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஈட்டியம்பட்டி பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் கள் விற்று கொண்டிருந்த பர்கூர் அருகே பெருகோபனப்பள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 180 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்