மேட்டூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்
மேட்டூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் சிக்கினர்.
மேட்டூர்:
மேட்டூர் நகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பிடம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு, மேட்டூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 27) மற்றும் மேட்டூர் மாதையன்குட்டை சேர்ந்த வல்லரசு (23) ஆகிய 2 பேரும் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.