கிருஷ்ணாபுரம் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

Update: 2023-02-02 18:45 GMT

தர்மபுரி:

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டியை சேர்ந்தவர் காந்தி (வயது 60). தொழிலாளி. பொங்கல் பண்டிகையையொட்டி கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக அந்த பகுதியை சேர்ந்த பெருமாள் (43) என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று காந்தியிடம் கூறியுள்ளார். அப்போது காந்தி ரூ.5 ஆயிரம் கொடுக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாள், ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காந்தி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பெருமாளை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்