பாலக்கோடு:
தர்மபுரி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்டகபைல் பஸ் நிறுத்தம் அருகே கையில் பையுடன் 2 பேர் சந்தேகப்படும் படியாக நின்றனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மனஅள்ளியை சேர்ந்த பெயிண்டர்களான பூஞ்சோலையான் (வயது 43), முனிராஜ் (36) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.