இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

இருசக்கர வாகனங்கள் திருடியவர் கைது

Update: 2022-12-20 22:21 GMT

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் நவின்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் தன்னுடைய மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அவருடைய மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இதுபோல் டி.ஜி.புதூரில் நிறுத்தப்பட்ட சதுமுகையை சேர்ந்த கணேசன் என்பவரின் மொபட்டும் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனங்களை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் வேட்டுவன் புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், 'அவர் ஏளூர் வேட்டுவன் புதூர், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 36) என்பதும், அவர்தான் நவீன்குமார், கணேசன்ஆகியோரின் இரு சக்கர வாகனங்களை திருடியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகேந்திரனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்