மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 62). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த காசி என்கிற கார்த்திகேயனுக்கும் முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று காசி, முதியவர் பெருமாளை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பெருமாள் கேட்டபோது, காசி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுதார். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள், கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து, காசியை கைது செய்தார்.