மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி பேரூராட்சி 7-வது வார்டு புதுத்தெருவில் ஒருவர் கஞ்சா புகைத்து கொண்டிருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (வயது 52) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.