வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது

வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-10 19:07 GMT

வடமாநில வாலிபர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 வழிப்பறி 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகுல்தீப்(வயது 24) இவர் பல்லடம் கல்லம்பாளையம் விசைத்தறி குடோனில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் சுபாஷ் சந்த்( 23).இவர் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 24-ந்தேதி சுபாஷ் சந்த் மோட்டார் சைக்கிளில் ராகுல் தீப்புடன் கல்லம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கரைப்புதூரை அடுத்துள்ள தொட்டி அப்புச்சி கோவில் ரோட்டில் சென்றபோது இவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 3 மர்ம ஆசாமிகள் இவர்கள் வைத்திருந்த 2 செல்போன்கள், ரூ.3,500 ஆகியவற்றை பறித்துக்ெகாண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து இருவரும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் பல்லடம் சின்னக்கரை அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் 3 பேரும் ஆறுமுத்தாம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வடமாநில வாலிபர்களிடம் 2 செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

 3 பேர் கைது 

அதைதொடர்ந்து பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (25), அதே பகுதியை சேர்ந்த பூபதி ராஜா (29), அருள்புரம் செந்தூரான் காலனியை சேர்ந்த சிவக்குமார் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்