ஓசூரில் கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது
ஓசூரில் கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்ற வாலிபா் ஒருவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நோயல் படரய்டா (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் யாரிடம் கஞ்சா வாங்கி கொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.