வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகன் கைது

வாலிபரை அரிவாளால் வெட்டிய தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-03 17:21 GMT


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மேலபுதுக்குடி தேத்திவலசை. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி மகன் சிவா (வயது20). இவர் அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் அபிநயாவை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு அபிநயாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவா நம்பியான்வலசையில் தங்கி இருந்த அபிநயாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அபிநயாவின் தந்தை நாகராஜ், அண்ணன் சூர்யா (22) ஆகியோர் சேர்ந்து சிவாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்களாம். இதில் படுகாயம் அடைந்த சிவா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை-மகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்