கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை நகர் பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை தடுக்கும் வகையிலும், கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சோழகன் பேட்டையை சேர்ந்த பிரவின், ராஜேந்திரன் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வதற்காக தேவகோட்டைக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவகோட்டை நகர் போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் ½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.